Show all

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். அபுதாபி பட்டத்து இளவரசரும், அமீரக ஆயுதப்படைகளின் துணை சுப்ரீம் கமாண்டருமான ஷேக்முகம்மது பின் ஜாயித்அல் நஹ்யான் அழைப்பின்பேரில் மோடி இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.

இதன்மூலம் கடந்த 34 ஆண்டுகளில் அமீரகம் செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெயரை அவர் பெறுகிறார். இதற்கு முன்னர் 1981-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அமீரகம் சென்றார்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது அவர் அமீரக பிரதமரும், துணை அதிபருமான ஷேக்முகம்மது பின் ராஷித் அல் மக்தூமை சந்தித்து பேசுகிறார். முதலாவதாக அபுதாபி செல்லும் அவர், பின்னர் துபாய் பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கமாக வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பது ஆகியவை உள்ளது. இந்தியாவின் பெட்ரோலிய பொருட்கள் 9 சதவீதம் அமீரகத்தில் இருந்து தான் வருகிறது.

எனவே இதுவும் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பெறும். மோடி அபுதாபியில் உள்ள உலகின் மிகப்பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றான ஷேக்ஜாயித் பள்ளிவாசலுக்கு செல்கிறார். இதுவே பிரதமர் மோடி வெளிநாட்டு

சுற்றுப்பயணத்தின்போது செல்லும் முதல் பள்ளிவாசல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.