Show all

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஸையோமி நிறுவன முதல் ஸ்மார்ட்போனை சந்திரபாபு நாயுடு; நேற்று வெளிய

உலக அரங்கில் தற்போது 150 கோடியாக இருந்துவரும் ஸ்மார்ட்போன்களின் விற்பனை வரும் 2017-ஆம் ஆண்டு 170 கோடியாக உயரும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அதிகபட்ச ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் மூன்றாவது இடத்தில் ஸையோமி நிறுவனம் தற்போது இருந்து வருகிறது. சீனாவை சேர்ந்த இந்த நிறுவனம் மிகக் குறுகிய பட்ஜெட்டில், பல்வேறு சேவைகளுடன் தரமான ஸ்மார்ட்போன்களை தற்போது இந்தியாவிலேயே உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது.

‘மேக் இன் இந்தியா, மேட் இன் ஆந்திரப் பிரதேசம்’ என்ற முழக்கத்துடன் ஆந்திரப் பிரதேசத்தின் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, ஸையோமி நிறுவனம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட அதன் முதல் ஸ்மார்ட்போனை ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டணத்தில் நேற்று வெளியிட்டு, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் ஏற்கனவே விற்பனையாகிவரும் சீன தயாரிப்பான ரெட்மி 2-வின் அடுத்தபடியாக, இந்திய தயாரிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ரெட்மி 2 பிரைம்’ ஸ்மார்ட்போன்கள் இதற்கு முந்தைய மாடலைவிட இருமடங்கு சிறப்பம்சம்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ‘ரெட்மி 2 பிரைம்’ இரட்டை சிம் கார்ட்கள் போடும் வசதியுடன், 2புடீ ரேம், 16புடீ உள்ளடக்க சேமிப்பு 2200அயுh பேட்டரியும், 8ஆP பின் கேமராவும், 2ஆP முன் கேமராவுடன் ரூபாய், 6,999-க்கு விற்பனைக்கு வந்துள்ளது.

சீனாவைத் தொடர்ந்து, இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை உலக அளவில் இரண்டாவதாக உயரும் என்பதால் ஸையோமி நிறுவனம் இந்தியாவில் அதிகமாக முதலீடு செய்ய இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.