Show all

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை: சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னையில் 26-ந்தேதி உண்ணாவிரதம்

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை: சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னையில் 26-ந்தேதி உண்ணாவிரதம் பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஆகஸ்ட் 12, 8:54 யுஆ ஆந்திராவில் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி ஆந்திர வனத்துறை சிறப்பு படையினரால் 20 தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேல் நடவடிக்கை குறித்து தமிழக அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி மூத்த தலைவர் எம்.எச்.ஜவாருல்லா எம்.எல்.ஏ., எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில துணை செயலாளர் அமீர் அம்சா, தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, தமிழ் தேசிய பேரியக்கம் த.வெங்கட்ராமன், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், தந்தை பெரியார் திராவிடர் கழக மண்டல அமைப்பாளர் அண்ணாமலை, திரைப்பட இயக்குனர் வ.கவுதமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து, வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

20 தமிழர்களை படுகொலை செய்த ஆந்திர அரசின் கொடுஞ்செயலுக்கு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவிக்கவில்லை. படுகொலை குறித்த உண்மைகளை மூடி மறைப்பதற்காக, கொல்லப்பட்டவர்களின் உடல்களை புதைப்பதற்கு பதில் எரிக்கும்படி தமிழக காவல்துறை மிரட்டியதால் 14 பேர் உடல்கள் எரிக்கப்பட்டு விட்டன.

ஆந்திர அரசின் குற்றத்தை மூடி மறைக்கவும், நீதியைப் புதைக்கவும் தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற வழக்கில், தமிழக அரசு தன்னையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ள வேண்டும். மத்திய புலனாய்வுத்துறை (சி.பி.ஐ.) விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் ஆகஸ்டு 26-ந்தேதி சென்னையில் உண்ணாவிரதம.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.