Show all

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மீது நிதிமோசடி வழக்கு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மீதான நிதிமோசடி வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் வங்கி அதிகாரிகளுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

கடலூர் மாவட்டம் கொண்டூரைச் சேர்ந்த பி.ஜெகத்ரட்சகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் கவுன்சில், சென்னை தி.நகரில் அடுக்குமாடி கட்டிடம் கட்ட வேண்டும் என்று நிதி திரட்டியது.

ஆனால், மாநிலக் கவுன்சிலுக்கு தெரியாமல் கட்சியின் சொத்து ஆவணங்களை வங்கியில் அடமானம் வைத்து 13.5 சதவீத வட்டிக்கு ரூ.13 கோடியை கடனாக தா.பாண்டியன் வாங்கியது தெரியவந்தது. கட்சியின் சொத்தை அடமானம் வைத்து பணம் பெறுவதற்கு தா.பாண்டியனுக்கு அதிகாரம் இல்லை.

அப்படி இருக்கும்போது வங்கி அதிகாரிகள் எப்படி கடன் கொடுத்தனர்? இது சட்டவிரோதமாகும். எனவே, இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இது குறித்து நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தா.பாண்டியன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோர் 4 வாரத்தில் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.