Show all

இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறுகிறது உலக சாம்பியன்ஷிப் போட்டி

இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், கிடாம்பி ஸ்ரீகாந்தும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், டென்மார்க்கின் லைன் ஜெர்ஸ்ஃபெல்டட்டை எதிர்கொண்டார் இந்தியாவின் சிந்து. தரவரிசைப் பட்டியலில் 35ஆவது இடத்தில் இருக்கும் லைனுக்கும், 13ஆவது இடத்தில் இருக்கும் சிந்துவுக்கும் இடையே நடைபெற்ற இந்த ஆட்டம், சுமார் 50 நிமிடங்கள் நீடித்தது.

இறுதியில், 11-21, 21-17, 21-16 என்ற செட் கணக்கில் லைன் ஜெர்ஸ்ஃபெல்டட்டை தோற்கடித்தார் சிந்து. அடுத்ததாக, காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் சீனாவைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியனும், முன்னாள் உலக சாம்பியனுமான லி ஜிருயை எதிர்கொள்கிறார் சிந்து. கடந்த 2014, 2013 ஆண்டுகளில் இதேபோட்டியில் வெண்களம் வென்ற சிந்து, காயம் காரணமாக பல தருணங்களை சிகிச்சைக்கும், ஓய்வுக்கும் செலவிட நேரிட்டது.

ஆடவர் ஒற்றையர்: இதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரிவில் ஆஸ்திரேலியாவின் மிச்செல் ஃபாரிமனை எதிர்கொண்டார் இந்தியாவின் ஸ்ரீகாந்த். 24 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் 21-10, 21-13 என்ற செட்களில் ஃபாரிமனை வீழ்த்தினார் ஸ்ரீகாந்த்.

தரவரிசைப் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த் தனது இரண்டாவது சுற்றில், சீன தைபேயின் ஜென் ஹாவை எதிர்கொள்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.