Show all

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை சோழிங்கநல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொருளாளார் மு.க., ஸ்டாலின் பங்கேற்று பேசினார;. தமிழகத்தில் பல முறை மதுக்கடைகளை திறக்கும் உத்தரவை பிறப்பித்தது அ.தி.மு.க., ஆட்சி தான் என்றும், மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்பதில் தி.மு.க., எப்போதும் உறுதியான கொள்கையுடன் இருக்கிறது. என்றும் தெரிவித்தார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என கலைஞர் அறிவித்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் , எங்களுக்கு மதுவிலக்கு குறித்து பேச அருகதை இல்லை என்கிறார், அவருக்கு நான் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். கலைஞர் அறிவிப்பால் மதுக்கடைகள் மூலம் பிழைப்பு நடத்தியவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தமிழகத்தில் மதுக்கடைகள் மூட வேண்டும் என்பதில் தி.மு.க,. எப்போதும் கொள்கை நிலைப்பாடு கொண்டுள்ளது. 1971 ஆம் ஆண்டில் சட்டசபையில் கட்சி தலைவர் கருணாநிதி பேசுகையில், மதுக்கொள்கை குறித்து தெளிவாக எடுத்து கூறியுள்ளார். 1973 ல் கள்ளுக்கடைகளை கலைஞர் மூடினார். 1974 ல் சாராயக்கடைகளை மூடினார;. ஆனால் 1981 மே மாதம் எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில் கள்ளுக்கடைகள் , சாராயக்ககடைகள் திறக்கப்பட்டன. 1983 ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டது. 2003 ல் ஜெ., ஆட்சி காலத்தில் வீதிக்கு வீதியாக டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்து விடப்பட்டது.

டாஸ்மாக் கடைகள் அமைக்கும் பொறுப்பை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது ஜெ., யின் ஆட்சிக்கால அவலம். தமிழகம் முழுவதும் இன்று 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள், 4 ஆயிரத்து 500 பார்கள் உள்ளன. இதில் அரசுக்கு வேண்டிய மது பான வகைகளை மிடாஸ் குரூப்பினர் விற்கின்றனர்.

தி.மு.க., விடுத்த அழைப்பை ஏற்று தமிழகம் முழுவதும் மாணவர்கள் , பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்த துவங்கியுள்ளனர். தி.மு.க.,தலைவர் கருணாநிதியை சந்தித்து மதுக்கடைகள் மூடுவதற்கு அவரது ஒத்துழைப்பு வேண்டும் என கேட்டு கொண்டு குமரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் சசிபெருமாள் இறந்தார். இவர் கொல்லப்பட்டுள்ளார்.

சொன்னதை செய்வோம்: தி.மு.க., சொன்னதை செய்யும் என்ற நம்பிக்கையில்தான் சசிபெருமாள் கருணாநிதியை சந்தித்தார். கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் வழங்குவோம் என்று அறிவித்தார், முதல்வரானதும் செய்தார். இது போல் ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கப்படும், என்று அறிவித்ததையும் செய்து காட்டினோம். தி.முக., வரலாற்றில் முடியாதது என்பது இல்லை. இது போல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை முழுமையாக மூடுவோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.