Show all

கோயம்பேடு முதல் கோட்டை வரை தேமுதிக மனிதச் சங்கிலி

கோயம்பேடு முதல் கோட்டை வரை தேமுதிக மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

இன்று மாலை 4 முதல் 5 மணிவரை சென்னை கோயம்பேடு முதல் கோட்டை வரை மனித சங்கிலிப் போராட்டம் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி நடைப்பெறும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருந்தார். ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேமுதிக மனுத் தாக்கல் செய்தது.இந்த மனு இன்று அவசர வழக்காக எடுத்துக்கொண்டு விசாரணைக்கு வந்த நிலையில், மனிதச் சங்கிலிப் போராட்டம் குறித்து 5 நாட்களுக்கு முன்பே அறிவித்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தேமுதிகவுக்கு அறிவுறுத்தினர்.

அதோடு காந்தி சிலைக்குப் பின்புறம் மட்டுமே மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியும் என்று கூறிய நீதிபதி சத்திய நாராயணா, வழக்கு விசாரணையை மீண்டும் இன்று மாலைக்கு ஒத்தி வைத்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.