Show all

ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவில் எந்தவித அரசியலும் இல்லை

ராஜீவ் கொலைக்குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவில் எந்தவித அரசியலும் இல்லை என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ராஜீவ் கொலைக்குற்றவாளிகளை விடுதலை செய்ய முடிவெடுத்த தமிழக அரசுக்கு எதிரான மத்திய அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.இந்த மனு விசாரணையின் போது தமிழக அரசு சார்பான வாதம் எடுத்து வைக்கப்பட்டது. வாதத்தின் போது, ராஜீவ் காந்தி கொலைக்குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய அனைத்துக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் சம்மதத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும், இதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும் கூறப்பட்டது.

மேலும் சட்டமும், அதிகாரமும் பொது மக்களைப் பாதுகாக்கத்தானேத் தவிர அழிக்க அல்ல என்றும் தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.