Show all

சிபிஐ பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது என்று தயாநிதி மாறன்

சிபிஐ பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது என்று தயாநிதி மாறன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் கைதாகாமல் இருக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.இந்த முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று சிபிஐ தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்து உள்ளது.அம்மனுவில் தயாநிதி மாறன் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும், எனவே, ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் சிபிஐ கேட்டுக்கொண்டுள்ளது.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தங்களது நிறுவனம் பண்பலை ஏலத்தில் கலந்துக்கொள்ள விதிக்கப்பட்டத் தடை விலகியதற்கு பழி வாங்கும் நோக்கில் சிபிஐ செயல்படுகிறது என்று கூறிய தயாநிதி மாறன் தரப்பு, தங்களது தரப்பு விளக்கத்தை எடுத்து வைக்க வருகிற திங்கட்கிழமை வரை அவகாசம் கேட்டது.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நீதிபதிகள் நாளை வரை விளக்கம் அளிக்க தயாநிதிக்கு அவகாசம் கொடுத்து வழக்கு விசாரணையை நாளை வரை ஒத்தி வைத்துள்ளனர்.

சிபிஐ பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது என்று தயாநிதி மாறன். சிபிஐ பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது என்று தயாநிதி மாறன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் கைதாகாமல் இருக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.இந்த முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று சிபிஐ தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்து உள்ளது.அம்மனுவில் தயாநிதி மாறன் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும், எனவே, ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் சிபிஐ கேட்டுக்கொண்டுள்ளது.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தங்களது நிறுவனம் பண்பலை ஏலத்தில் கலந்துக்கொள்ள விதிக்கப்பட்டத் தடை விலகியதற்கு பழி வாங்கும் நோக்கில் சிபிஐ செயல்படுகிறது என்று கூறிய தயாநிதி மாறன் தரப்பு, தங்களது தரப்பு விளக்கத்தை எடுத்து வைக்க வருகிற திங்கட்கிழமை வரை அவகாசம் கேட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நீதிபதிகள் நாளை வரை விளக்கம் அளிக்க தயாநிதிக்கு அவகாசம் கொடுத்து வழக்கு விசாரணையை நாளை வரை ஒத்தி வைத்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.