Show all

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்தது தவறு நீதிபதி எஸ்.கே.கவுல் கருத்து

போராட்டம் என்கிற பெயரில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்தது தவறு என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நேற்று பச்சியப்பன் கல்லூரி மாணவர்கள் மதுக்கடைகளை உடைத்து நாசம் செய்து மதுவிலக்கை அமல்படுத்தக் கோரிக்கை வைத்தனர்.அதே சமயம் காவலர்களால் மாணவர்கள் கடுமையான தடியடிப் பிரயோகத்துக்கு ஆளாகினர். இதுத் தொடர்பாக சென்னை வழக்கறிஞர் ஒருவர் நேரடியாக தலைமை நீதிபதியிடம் புகார் அளித்த நிலையில், போராட்டம் என்கிற பெயரில் மாணவர்கள் சட்டத்தைக் கையிலெடுத்தது தவறு என்று தலைமை நீதிபதி கவுல் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் புகாரை ஒரு மனுவாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி கவுல் வழக்கறிஞருக்கு அறிவுறுத்தி உள்ளார் என்று தெரிய வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.