Show all

இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்ற நிலையில் 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்திலேயே அந்த அணியின் மசகட்சா டக்அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து எர்வைன்- 12 ரன்கள், சகாபா - 2 ரன்கள் மற்றும் சிகும்புரா - 5 ரன்கள் என அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.இதனால், ஜிம்பாப்வே அணி 54 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக சிகந்தர் ரஸா 100 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். வங்கதேச அணி இறுதியாக 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது.

அதை தொடர்ந்து 236 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் அடிய நியூசிலாந்து அணி 42.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை அடைந்தது. மார்டின் குப்தில் 116 ரன்களும் டாம் லேதம் 110 ரன்களும் குவித்தனர். இறுதியாக நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.