Show all

தமிழ் நாட்டில் இன்று ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம்

இன்று தமிழக மக்கள் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டத்தை வெகு கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.ஆடி மாதம் 18ம் நாளை ஆடிப்பெருக்கு நாளாக தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி இன்றைய தினத்தில் காவிரித் தாய்க்கு காப்பரிசி கிளறி வைத்து மஞ்சள் கயிறு, கருப்பு வளையல், பழங்கள்,பூ வைத்து ஆற்றங்கரை படித்துறையில் படையலிட்டு பூஜை செய்து காவிரி ஆற்றை வழிபடுவர்கள்.

மேலும், இந்நாளில் புதுமணத் தம்பதியர் தம்பதி சகிதமாக ஆற்றுப் படித்துறை வந்து, மணப்பெண்ணின் கழுத்தில் புதிய மஞ்சள் கயிறு அணிவிப்பார்கள்.இந்தக் கோலாகலங்கள் காவிரி பாயும் தமிழக மாவட்டங்களில் உள்ள மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி தமிழக அரசு காவிரியில் 18 ஆயிரம் கன அடிநீரை கூடுதலாகத் திறக்க உத்தரவுப் பிறப்பித்தது என்பதுக் குறிப்பிடத் தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.