Show all

மாறன் சகோதரர்கள் மீதான ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது

மாறன் சகோதரர்கள் மீதான ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.தயாநிதி மாறன் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, முறைகேடாக ஏர்செல் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளித்து.

பிரதி பலனாக மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடுகளை சன் தொலைக்காட்சியில் செய்ய வைத்தார்கள் மாறன் சகோதரர்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. மாறன் சகோதரர்களான தயாநிதி மற்றும் கலாநிதி மாறன் மீது சிபிஐ குற்றப்பதிவு செய்து வழக்குப் பதிவு செய்தது.

இவ்வழக்கு விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணை தொடங்கியது.

மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜரான நிலையில், மலேசியா மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அனுப்பிய சம்மன் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை என்று அந்நிறுவனங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.இதையடுத்து மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.