Show all

ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறும் தமிழகம் தழுவிய கடையடைப்பு.

மதுகடைகளை மூட வலியுறுத்தி ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறும் தமிழகம் தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இச்சங்கத்தின் பி.உச்சிமாகாளி, ஜோ.ராஜ்மோகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகம் முழுவதும் 6823 மதுக்கடைகளை திறந்து அதன் மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்ட இந்த ஆண்டு தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. மேலும் புதிய மதுகடைகளையும் பார்களையும் துவங்க முயற்சித்து வருகிறது.

ஏற்கெனவே தமிழகத்தில் மதுப்பான கடைகள் மூலம் ஏழை, எளிய மக்களின் குடும்பங்கள் சீரழிந்து வருவதோடு தற்போது 4வயது குழந்தை முதல் பள்ளி மாணவ ,மாணவிகள் உட்பட மதுவால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இதை தடுக்க தமிழக அரசு மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துSFI-DYFI-AIDWA சார்பாக ஆகஸ்ட் 4ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்த அறைக்கூவல் விடுக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.