Show all

காங்கிரஸ் எம்பிக்கள் 27 பேர் மக்களவையிலிருந்து இடை நீக்கம்

காங்கிரஸ் எம்பிக்கள் 27 பேரை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவுப் பிறப்பித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் காங்கிரஸ் எம்பிக்கள் இடைவிடாது அமளியில் ஈடுபட்டு வாந்தனர். இதனால் நாடாளுமன்றம் 10 நாட்களாக தொடர்ந்து முடங்கி வருகிறது. இதையடுத்து இன்று காலை அனைத்துக்கட்சி எம்பிக்கள் கூட்டம் கூடியது.

நாடாளுமன்றத்தின் அவைகளை சுமுகமாக நடத்தித் தர சுமித்ரா மகாஜன் கோரிக்கை வைத்தார்.இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில் மக்களவை கூடியபோது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தாம் சட்ட விரோதமாக லலித் மோடிக்கு உதவி செய்யவில்லை என்பதை முன்வைத்தார்.

இதை விவாதிக்க நடுவண் அரசு தயாராக இருந்த போதிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாய்ப்பளிக்கவில்லை என்றும் சுஷ்மா கூறினார். இருந்த போதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடைவிடாத அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

முதலில் அறிவுறுத்திய சுமித்ரா மகாஜன், அடுத்து எச்சரிக்கை விடுத்தார்.கடைசியாக 27 காங்கிரஸ் எம்பிக்களை இடைநீக்கம் செய்வதாக உத்தரவுப் பிறப்பித்தார்.மொத்தம் உள்ள 44 காங்கிரஸ் எம்பிக்களில் 27 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு, ராகுல்காந்தி, சோனியா காந்தி, கமல்நாத், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட 17 காங்கிரஸ் எம்பிக்கள் மட்டுமே மக்களவையில் உள்ளனர் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.