Show all

யாகூப்மேமன் மனைவிக்கு எம்.பி. பதவி வழங்க கோரியவர் தற்காலிக நீக்கம்

மும்பையில் 1993–ம் ஆண்டு 13 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த அதிபயங்கர தாக்குதலில் 257 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். உலகை உலுக்கிய இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு நிதி உதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட யாகூப் மேமன், கடந்த 30 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். இந்த நிலையில் அவருடைய மனைவி ரஹீனுக்கு கட்சி மேலிடம் டெல்லி மேல்-சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கவேண்டும் என்று கோரி மராட்டிய மாநில சமாஜ்வாடி துணைத் தலைவரான முகமது பரூக் கோஷி, கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில், ரஹீன் பல ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்தவர். அவர் எவ்வளவு வேதனைகளை சிறையில் அனுபவித்து இருப்பார். இன்று அவர் ஆதரவற்றவராக ஆகிவிட்டார். இதுபோன்று ஏராளமான முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஆதரவற்றவர்களாக உள்ளனர். அவர்களுக்காக நாம் பாடுபடவேண்டும். எனவே ரஹீனை டெல்லி மேல்சபை எம்.பி.யாக நமது கட்சி நியமிக்கவேண்டும்.என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவிற்கு, கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பல்வேரூ கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவரை தற்காலிக நீக்கம் செய்து கட்சி தலைமை நடவடிக்கை எடுத்து உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.