Show all

மாவட்ட தலைவர்களை நீக்கும் அதிகாரம் இளங்கோவனுக்கு இல்லை

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘தொட்டியம் இ.எம்.சரவணன் (திருச்சி வடக்கு), ஏ.வி.எஸ்.இளங்கோவன் (தருமபுரி), ஜி.ஜெயபிரகாஷ் (சேலம் மாநகர்), எஸ்.கே.செல்வராஜ் (சேலம் கிழக்கு), பி.கோபால் (சேலம் மேற்கு), ஆர்.மதனகோபால் (பெரம்பலூர்) ஆகியோர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்குப் பதிலாக என்.ஜெயப்பிரகாஷ் (திருச்சி வடக்கு) கே.ராஜாராம் வர்மா (தருமபுரி), எஸ்.பி.மேகநாதன் (சேலம் மாநகர்), எம்.பெரியசாமி (சேலம் கிழக்கு), ஏ.என்.முருகன் (சேலம் மேற்கு), டி.தமிழ்செல்வன் (பெரம் பலூர்) ஆகியோர் மாவட்டத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று எஸ்.கே.செல்வராஜ் பி.கோபால் ஜி.ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் அறிவிப்பு செல்லாது. எங்களை நீக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை.என கூறியுள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தியின் அனுமதியின்றி தன்னிச்சையாக இளங்கோவன் அறிவித்துள்ளார்.எனவே இந்த அறிவிப்பை ஏற்க முடியாது என கூறியுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.