Show all

பரவை முனியம்மாவுக்கு நிதியுதவி

பிரபல நாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா உடல் நிலை குறைவு காரணமாக மதுரை, தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். தனது குடும்பத்தின் ஏழ்மை காரணமாகவும், தன் முதுமை காரணமாகவும் தனக்கு ஏற்பட்டுள்ள வறுமைச் சூழலில் இருக்கிறார்.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா பரவை முனியம்மாவுக்கு ரூ.6 லட்சம் நிதியுதவியும், குடும்ப செலவுகளுக்கென்று மாதந் தோறும் ரூ. 6 ஆயிரம் ’புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை’ல் இருந்து வழங்க ஆணை யிட்டுள்ளார் என அ.தி.மு.க. தலைமை கழகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.