Show all

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது

சர்வதேச கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகிறது.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.52–ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.78–ம் குறைந்தது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.67.29–ல் இருந்து ரூ.64.77 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.51.08–ல் இருந்து ரூ.47.30 ஆகவும் குறைந்தது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

அதேபோல, மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலையும் குறைந்தது. 14.2 கிலோ கொண்ட சிலிண்டருக்கு டெல்லியில் ரூ.23.50 குறைந்தது. இதன்மூலம் மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் ரூ.608.50–ல் இருந்து ரூ.585 ஆக குறைந்தது. ஆனாலும் மானியத்துடன் கூடிய கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை. பல மாதங்களுக்கு பின்னர் கியாஸ் சிலிண்டர் விலை 2 முறை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.