Show all

சென்னை சுதேசி இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில் மோடி பங்கேற்கிறார்

சென்னையில் நடைபெறும் சுதேசி இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார். 1905ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ம் தேதி தேசிய கைத்தறி நாளாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் வரும் ஏழாம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெறும், சுதேசி இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில், நெசவாளர்களுக்கு சந்த் கபீர் மற்றும் தேசிய கைத்தறி விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார். மேலும் தரமான கைத்தறி பொருள்கள் சர்வதேச சந்தையில் கிடைக்கும் விதமாக "இந்தியா கைத்தறி" என்ற பிராண்டையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.

தமிழகம் வரும் பிரதமரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை மாநில பாரதிய ஜனதா கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை உருவாக்கவும், நெசவாளர்களின் வருமானத்தை பெருக்கவும் தேசிய கைத்தறி நாள் உதவும் என்று மத்திய அரசு கருதுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.