Show all

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்கப்படும்

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமான வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு திருவிழா வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தொடங்குகிறது. இத்திருவிழாவில்-நாடு முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையை வழிபட்டுச் செல்வர்.

இந்தத் திருவிழாவை முன்னிட்டு வடமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, மும்பையின் பந்த்ரா ரெயில் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட் 27 ஆம் தேதி ரெயில் சிறப்பு ரெயில் (வண்டி எண் 09001) இயக்கப்படவுள்ளது. இரவு 10.50 மணிக்கு கிளம்பும் இந்த ரெயில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடையும்.

மறுமார்க்கமாக ஆகஸ்ட் 29 ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து கிளம்பும் ரெயில் (வண்டி எண் 09002) ஆகஸ்ட் 31 ஆம் தேதி பிற்பகல் 2.20 மணிக்கு பந்த்ரா ரெயில் நிலையத்தை சென்றடையும்.மேற்கண்ட இந்த சிறப்பு ரெயில்களில் முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்க முடியும்.

முன்பதிவு ஆகஸ்ட் 3 ஆம் தேதியில் இருந்து தொடங்கப்படும் என்று மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.