Show all

சென்னையில் பட்டம் விட வார்டு வாரியாக தனி இடம் ஒதுக்க முடியாது

பட்டம் விட வார்டு வாரியாக தனி இடம் ஒதுக்க முடியாது:என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு பட்டம் விட்டதில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து வாகனத்தில் பயணித்த ஒரு குழந்தை உயிரிழந்தது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டம் விட தனியிடம் ஒதுக்கித் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோபிகா என்பவர் மனுத் தொடுத்து இருந்தார். அந்த மனுவில் சென்னை முழுவதும் வார்டு வாரியாக தனியிடம் ஒதுக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வார்டு வாரியாக பட்டம் விடத் தனியிடம் ஒதுக்குவது என்பது முடியாது என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.அதோடு மாஞ்சா நூல் தயாரிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றும், அதைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்தது. தமிழக அரசு கூறியுள்ளபடி மாஞ்சா நூல் தயாரிக்காமல் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர் நீதிபதிகள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.