Show all

காணமல்போன மலேசிய விமானத்தின் பாகங்கள் ரீயூனியன் கடற்பகுதியில் கண்டுபிடிப்பு

ரீயூனியன் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விமான பாகங்கள், மாயமான MH370 மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்னும் சந்தேகம் வலுத்துள்ளது. இதுதொடர்பாக தீவிர ஆய்வு செய்து வருவதாக பிரான்ஸ் நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சர் வாரன் டிரஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனதிற்கு சொந்தமான MH370 போயிங் விமானம், ஐந்து இந்திய பயணிகள் உட்பட 239 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து சீனாவுக்கு சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. தீவிர தேடுதல் நடத்தியும் விமானம் என்ன ஆனது என்ற தகவல் கிடைக்கவில்லை. பயணிகள் நிலை குறித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, MH370 விமானம் காணாமல் போனதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஒரு வருட காலம் ஆகியும் அவ்விமானம் பற்றிய எந்த தகவலும் கிடைக்கத்தாத நிலையில் தற்போது இந்திய பெருங்கடலுக்கு உட்பட்ட ரீயூனியன் கடற்பகுதியில் ஒதுங்கியுள்ள விமான பாகங்கள் மாயமான விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்ற நம்பிக்கை வலுத்துள்ளது. ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ஆய்வின் முதற்கட்ட தகவலின் படி, கண்டெடுக்கப்பட்டுள்ள விமான பாகம் பல மாதங்களாக நீருக்கு அடியில் இருந்திருக்கும் என யூகிக்கப்படுகிறது. மேலும் கண்டெடுத்துள்ள விமான பாகங்களின் வடிவமைப்பு, மாயமான விமான வடிவமைப்புடன் (போயிங் 777) ஒத்து போவதாகவும் கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.