Show all

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வெப்பச் சலனம் காரணமாக, கடந்த ஒரு வாரமாக தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

வெப்பச் சலனம் நீடிப்பதால், இன்று தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.