Show all

ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 281 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 169 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 495 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி பிர்மிங்ஹாம் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன் படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி வீரர் கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் மட்டும் நிலைத்து நின்று 52 ரன்கள் குவித்தார். இறுதியாக ஆஸ்திரேலியா அணி 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அபாரமாக பந்து வீசிய இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 23 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். அதை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிக பட்சமாக ஜே ரூட் 63 ரன்கள் குவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.