Show all

இன்று ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கம்

டாக்டர் அப்துல்கலாம் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுவதை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.மறைந்த டாக்டர் அப்துல்கலாமிற்கு ராமேஸ்வரத்தில் இன்று இறுதி சடங்கு நடைபெற உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக, சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நாளை காலை 7.30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட உள்ளது. மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் கிளம்புகிறது. இதேபோல் சென்னை கோயம்பேட்டிலிருந்து, ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.