Show all

வருடாவருடம் கலாம் இறந்த நாளன்று டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது

அப்துல்கலாமின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறுவதை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்க வேண்டும் என்று டாஸ்மாக் பாட்டாளி சங்கத்தின் பொதுச் செயலாளர் தனசேகரன் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

மேலும், அப்துல்கலாமின் இறந்த தினமான ஜூலை 27ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்து, டாஸ்மாக் கடைகளுக்கு ஆண்டுதோறும் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.எஸ். கர்ணன், கொள்கை ரீதியாக அரசு எடுத்த முடிவில் தாங்கள் தலையிட முடியாது என்றும், டாஸ்மாக்கிற்கு விடுமுறை விடுவது பற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கை திங்கட்கிழமைக்கு ஓத்திவைத்து நீதிபதி சி.எஸ்.கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.