Show all

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல், தனதுசொந்த பயன்பாட்டுக்காக அரசு கார் ஒன்றை ஒதுக்

எளிமையின் சின்னமாக வாழ்ந்து மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் இறுதி யாத்திரை நாளை தொடங்கவுள்ள நிலையில் மராட்டிய மாநிலம் புனேவில் வசித்துவரும் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல், தனதுசொந்த பயன்பாட்டுக்காக அரசு கார் ஒன்றை ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

புனே நகரை விட்டு வெளியே செல்லும்போது பயன்படுத்தும் விதமாக அரசு கார் வழங்கவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பிரதீபா பாட்டீல், கடிதம் எழுதியுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையே, அவரது கோரிக்கையானது, விதிமுறையை மீறியது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரதீபா பாட்டீல் ஏற்கனவே அவருடைய சொந்த வாகனத்தை பயன்படுத்துகிறார். இதற்கான பெட்ரோல் பில்லை அரசு கட்டுகிறது. ஆனால், புனேவிற்கு வெளியே பயணம் செய்யும்போது தனக்கு அரசு கார் வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளார். அரசு கார் அல்லது பெட்ரோல் மானியம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைதான் அவர் பெற முடியும், இரண்டையும் பெற முடியாது என்று அரசுதரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன. 

அரசு விதிமுறைகளின்படி, முன்னாள் குடியரசுத்தலைவர் இலவசமாக ஒரு காரை பெறலாம், பராமரிப்பு செலவும் அரசால் கொடுக்கப்படும். அப்படி அவர்கள் தங்களது சொந்த வாகனத்தை பயன்படுத்த விரும்பினால், 250 லிட்டர் பெட்ரோலுக்கான செலவு தொகை வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அளவு அந்த காரின் டிரைவருக்கு சம்பளம் வழங்கப்படும். பிரதீபா பாட்டீலின் அலுவலகம் சார்பில் கடந்த 3-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எழுதப்பட்ட கடிதத்தில், பிரதீபா பாட்டீல் புனேவிற்கு வெளியே பயணம் செய்யும்போது அரசு வாகனம் வழங்க, மராட்டிய அரசிடம் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. 

புனேவிற்கு வெளியே பயணம் செய்யும் போது எல்லாம் மாவட்ட நிர்வாகம் அவருக்கு அரசு வாகனம் வழங்கி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அவரது தனிப்பட்ட வாகனத்திற்கு பெட்ரோல் ‘பில்’லுக்கான சலுகையை வழங்கும் நிலையில், அரசு வாகனம் வழங்க மராட்டிய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் உத்தரவின்படி இவ்விவகாரத்தில் செயல்படுவதாக மராட்டிய அரசு தெரிவித்து விட்டது.‘மக்கள் குடியரசுத்தலைவர்' ‘இந்தியாவின் ஏவுகணை மனிதர்’ என்றெல்லாம் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் திடீர் மறைவு, நாட்டை பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தி உள்ள நிலையில் மற்றொரு முன்னாள் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீலின் கார் ஆசை தற்போது செய்தியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல், தனதுசொந்த பயன்பாட்டுக்காக அரசு கார் ஒன்றை ஒதுக்கவேண்டி அலம்பல். எளிமையின் சின்னமாக வாழ்ந்து மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் இறுதி யாத்திரை நாளை தொடங்கவுள்ள நிலையில் மராட்டிய மாநிலம் புனேவில் வசித்துவரும் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல், தனதுசொந்த பயன்பாட்டுக்காக அரசு கார் ஒன்றை ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். புனே நகரை விட்டு வெளியே செல்லும்போது பயன்படுத்தும் விதமாக அரசு கார் வழங்கவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பிரதீபா பாட்டீல், கடிதம் எழுதியுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையே, அவரது கோரிக்கையானது, விதிமுறையை மீறியது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதீபா பாட்டீல் ஏற்கனவே அவருடைய சொந்த வாகனத்தை பயன்படுத்துகிறார். இதற்கான பெட்ரோல் பில்லை அரசு கட்டுகிறது. ஆனால், புனேவிற்கு வெளியே பயணம் செய்யும்போது தனக்கு அரசு கார் வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளார். அரசு கார் அல்லது பெட்ரோல் மானியம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைதான் அவர் பெற முடியும், இரண்டையும் பெற முடியாது என்று அரசுதரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன. 

அரசு விதிமுறைகளின்படி, முன்னாள் குடியரசுத்தலைவர் இலவசமாக ஒரு காரை பெறலாம், பராமரிப்பு செலவும் அரசால் கொடுக்கப்படும். அப்படி அவர்கள் தங்களது சொந்த வாகனத்தை பயன்படுத்த விரும்பினால், 250 லிட்டர் பெட்ரோலுக்கான செலவு தொகை வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அளவு அந்த காரின் டிரைவருக்கு சம்பளம் வழங்கப்படும். பிரதீபா பாட்டீலின் அலுவலகம் சார்பில் கடந்த 3-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எழுதப்பட்ட கடிதத்தில், பிரதீபா பாட்டீல் புனேவிற்கு வெளியே பயணம் செய்யும்போது அரசு வாகனம் வழங்க, மராட்டிய அரசிடம் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. 

புனேவிற்கு வெளியே பயணம் செய்யும் போது எல்லாம் மாவட்ட நிர்வாகம் அவருக்கு அரசு வாகனம் வழங்கி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அவரது தனிப்பட்ட வாகனத்திற்கு பெட்ரோல் ‘பில்’லுக்கான சலுகையை வழங்கும் நிலையில், அரசு வாகனம் வழங்க மராட்டிய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் உத்தரவின்படி இவ்விவகாரத்தில் செயல்படுவதாக மராட்டிய அரசு தெரிவித்து விட்டது.

‘மக்கள் குடியரசுத்தலைவர்' ‘இந்தியாவின் ஏவுகணை மனிதர்’ என்றெல்லாம் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் திடீர் மறைவு, நாட்டை பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தி உள்ள நிலையில் மற்றொரு முன்னாள் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீலின் கார் ஆசை தற்போது செய்தியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.