Show all

பூமியை வாழத்தகுந்த கிரகம் ஆக்குவோம்‘ அப்துல் கலாம் பேச தயாரித்து வந்திருந்த கடைசி உரை தலைப்ப

அப்துல் கலாமின் கடைசி உரை அவர் எழுதிய புத்தகத்தில் இடம் பெறும் என்று உதவியாளர் தெரிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) நேற்று  மாலை மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இதுபற்றி அவரது உதவியாளர் ஸ்ரீஜன் பால்சிங் கூறியதாவது-

இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் ‘பூமியை வாழத்தகுந்த கிரகம் ஆக்குவோம்‘ என்ற தலைப்பில் அப்துல் கலாம் உரையாற்ற இருந்தார். பேசத்தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். ‘பூமியை வாழத்தகுந்த கிரகம் ஆக்குவோம்‘ என்ற பெயரில் அவர் புத்தகம் ஒன்றை எழுதி வந்தார். மாசுகளை அகற்றுதல், கழிவுப்பொருள் மேலாண்மை, நில மேலாண்மை, குடிநீர் பாதுகாப்பு, மறுசுழற்சி, எரிசக்தி பாதுகாப்பு, பசுமை கட்டிடங்கள், மாசற்ற எரிசக்தி போன்றவை பற்றி அந்த புத்தகத்தில் அவர் எழுத இருந்தார். இப்படி ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு நீண்ட காலமாக இருந்தது. அந்த புத்தகத்தை உருவாக்குவதற்காக நாங்கள் கடுமையாக உழைத்து வந்தோம். கிட்டத்தட்ட புத்தகத்தின் பாதி பகுதியை அப்துல் கலாம் எழுதி முடித்து விட்டார். 

இந்த புத்தகத்தில் இடம் பெறும் மேற்கண்ட விஷயங்கள் பற்றிதான் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற இருந்தார். அவரது உரை 4 ஆயிரம் வார்த்தைகளை கொண்டதாக இருந்தது. நிறைவு பெறாத அப்துல் கலாமின் ‘பூமியை வாழத்தகுந்த கிரகம் ஆக்குவோம்‘ புத்தகத்தில் அவரது இந்த கடைசி உரை இடம் பெறும். இந்த புத்தகத்தை அச்சிட்டு வெளியிடுவது தொடர்பாக அவர் எந்த பதிப்பகத்துடனும் அவர் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. என்றாலும் நாங்கள் ஆலோசனை நடத்தி இந்த புத்தகத்தை வெளியிட நடவடிக்கை எடுப்போம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.