Show all

பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு தண்டனையைக் குறைத்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு

பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு தண்டனையைக் குறைத்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது.கடந்த வருடம் ராஜீவ் கொலையாளிகளென குற்றம் சுமத்தப்பட்டுள்ள முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டவர்களின் தூக்குத் தண்டனையை,ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.

குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையைக் குறைத்தது செல்லாது என்று தீர்ப்பளிக்க வேண்டும் என்றும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 70வது பிரிவின்படி குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்த பின்னர் உச்ச நீதிமன்றம் அவ்விவகாரத்தில் தலையிடுவது உச்ச நீதிமன்ற அதிகாரத்தை மீறிய செயல் என்றும் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், குடியரசுத் தலைவர் கருணை மனு நிராகரிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள தண்டனையாகக் குறைத்தது செல்லும் என்றும், தண்டனைக் குறைப்புக்கு எதிரான மத்திய அரசு மனுவைத் தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.