Show all

அப்துல் கலாம் மறைவுக்கு கருணாநிதி நினைவுகளுடன் இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதியின் இரங்கல் செய்தி :

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா, மேதகு டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு, அவருடன் எனக்கிருந்த தொடர்பு பற்றி அடுக்கடுக்கான எண்ணங்கள் எழுந்தன.

சென்னை - கலைவாணர் அரங்கில் 4-9-2006 அன்று ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சார்பில் "தொல்காப்பியர் விருது" எனக்கு வழங்கப்பட்ட போது, அந்த விருதை எனக்கு வழங்கியவரே அப்துல் கலாம் அவர்கள்தான். அப்போது அவர் ஆற்றிய உரையும், என்னைப் பாராட்டிக்கூறிய வார்த்தைகளும் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாதவை. ஏன் அதற்கு முன்பே நான் எழுதிய தொல்காப்பியப் பூங்கா நுலினை மேதகு அப்துல் கலாம் அவர்கள் படித்து விட்டு, எனக்குப் பாராட்டுக் கடிதம் ஒன்றும் எழுதியிருந்தார்.

அது பற்றியும் கலைவாணர் அரங்கில் அவர் பேசும்போது குறிப்பிட்டார். மேலும் இத்தகைய உயர்வுக்கும் புகழுக்கும் உரிய அப்துல் கலாம் அவர்களை இந்தியத் திருநாடே இழந்து நிற்கும் இந்த வேளையில், அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரைப் பெரிதும் நேசிக்கும் இன்றைய இளைஞர்களுக்கும் தனது கவிதையின் சில வரிகளை கூறி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.