Show all

ஆறு மாநில முதலமைச்சர்கள் நேரில் அஞ்சலி

மறைந்த கலாமின் உடலுக்கு நாளை ராமேசுவரத்தில் பிரதமர் மோடி மற்றும் ஆறு மாநில முதலமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்துகின்றனர்.கவுஹாத்தி விமான நிலையத்திலிருந்து சற்று முன்னர் டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய பாரத் ரத்னா அப்துல் கலாமின் உடலுக்கு முப்படை சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி ஆளுநர் நஜீப் ஜங், அமைச்சர் மனோகர் பாரிக்கர்.டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், துணைக் குடியரசுத் தலைவர், ஹமீத் அன்சாரி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து கலாமின் உடல் டெல்லியில் உள்ள அவராது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அனைவரின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை பிற்பகல் 2 மணிக்கு ராமேஸ்வரம் கொண்டு வரப்படும் கலாமின் உடல் நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்வுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வரும் பிரதமரோடு, 6 மாநில முதலமைச்சர்களும் ராமேஸ்வரம் வந்து நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.