Show all

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

கூட்டுறவு பணியாளர்களுக்கான விரிவுபடுத்தப்பட்ட புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பணியாளர்களுக்கு இதற்கான அடையாள அட்டைகளை அவர் வழங்கினார். இந்த திட்டத்தின் மூலம், கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் உள்பட ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன் பெறுவார்கள் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வேளாண் கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் தவணை தவறிய கடன்தாரர்கள் பயன்பெறும் வகையில் கடன் தீர்வு திட்டத்தையும் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். இதன்படி, நீண்டகாலமாக கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத 5,741 பேருக்கு சுமார் 167 கோடி ரூபாய் வட்டிச் சலுகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.