Show all

சுற்றுலாப் பயணிகள் வருகை மிகுந்த மாநிலமாக தமிழகம் உள்ளதாக தகவல்.

கடந்த ஆண்டில் இந்தியாவிலேயே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்த மாநிலமாக தமிழகம் உள்ள தாகதகவல் வெளியாகியுள்ளது.

மத்திய சுற்றுலா அமைச்சகம் கடந்தவருட சுற்றுலாப்பயணிகள் குறித்த கணக்கெடுப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படிகடந்த 2014ம் ஆண்டு இந்தியாவுக்கு இரண்டே கால் கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். அதில் அதிகம் சுற்றுலாப்ப யணிகள்வந்த 10 மாநிலங்களின் பெயர்பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் 46 லட்சத்து 60 ஆயிரம் பயணிகளை ஈர்த்து தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளன. முதல் 10 இடங்களில் எப்போதும் இடம்பிடிக்கும் கோவா இந்த ஆண்டு அந்தப்பட்டியலில் இடம்பெறவில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.