Show all

இந்திய ராணுவத்தில் சுமார் 10 ஆயிரம் அதிகாரிகள் பணியிடங்கள்

இந்திய ராணுவத்தில் சுமார் 10 ஆயிரம் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

இது தொடர் பாகமக்களவையில் இன்று அவர் அளித்ததகவல்:

கடந்த 2012-ம் ஆண்டு முதல் 644 ராணுவ அதிகாரிகள் முன்கூட்டியே ஓய்வுபெற்றுள்ளனர். விமானப்படையில் 441 அதிகாரிகளும், கடற்படையில் 343 அதிகாரிகளும் முன்கூட்டியே ஓய்வு பெற்றிருக்கிறார்கள். இதுதவிர, இந்தியராணுவத்தில் 10 ஆயிரம் அதிகாரிகளுக்கும், இந்திய கடற்படையில் 1,800 அதிகாரிகளுக்கும் பற்றாக்குறைஉள்ளது. ராணுவத்தில் மருத்துவம் மற்றும் பல்மருத்துவபிரிவில் 9,642 அதிகாரி பணியிடங்கள் காலியாகஉள்ளன. இதே பிரிவில் கடற்படையில் 1,779 அதிகாரி பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. மேலும், இந்திய ராணுவத்தில் தற்போது விமான மோட்டிகளின்(வலவன்) எண்ணிக்கையும் பற்றாக் குறையாகவே இருக்கிறது.

ராணுவத்தில் அவரவர் பணி அனுபவங்களுக்கு ஏற்ப அவ்வப்போது வேறு பணிகளுக்கு உயர்வு பெற்று விடுவதே தற்காலிகமான ஆள்பற்றாக் குறைக்குகாரணம். மேலும், ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்வதில் கடுமையான விதிமுறைகள்பின்பற்றப்படுவதும்ஒருகாரணம். தற்போது இந்தியராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 45 ஆயிரம் வீரர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கடற்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள 10,523 பேருக்கும், விமானப்படைக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள 11,979 பேருக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் இது வரை மத்திய அரசு ராணுவ பயிற்சிக்காக மட்டும்ரூ.2,409.3 கோடியை செலவிட்டுள்ளது.

இவ்வாறு மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.