Show all

தனியார் செல்பேசி நிறுவனங்களுக்கு சொந்தமான விற்பனையகங்கள் மீதுதீவிரவாதிகள் கையெறிகுண்டுகள்

காஷ்மீரில் தனியார் செல்பேசி நிறுவனங்களுக்கு சொந்தமான விற்பனையகங்கள் மீது தீவிரவாதிகள் கையெறிகுண்டுகள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஷ்மீர் தலை நகர்ஸ்ரீநகர் அருகே அமைந்துள்ள தனியார் செல்பேசி நிறுவனங்களுக்கு சொந்தமான விற்பனையகங்கள் மிது தாக்குதல் நடந்தது. இதில் முதல் சம்பவம் கரண்நகரில் நடந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த ஏர்செல் விற்பனையகத்திற்கு காலை 11.30 மணியளவில் 2 தீவிரவாதிகள் வந்தனர். விற்பனையகத்தில் இருந்த ஊழியர்களை முதலில் வெளியேற்றிய அவர்கள், பின்னர் அந்த விற்பனையகத்தில் ஒரு கையெறிகுண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

மண்டல காவல் தலைமை அலுவலகத்துக்கு மிக அருகில் நடந்த இந்த தாக்குதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அங்கிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இருந்த வோடபோன் விற்பனையகத்திலும் இதைப் போன்ற தாக்குதல் நடைபெற்றது. இந்த 2 சம்பவங்களிலும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவங்களில் தொடர்புடைய தீவிரவாதிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அதன்படி அருகில் உள்ள சோதனைச்சாவடிகள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டு தீவிரதேடுதல் வேட்டை நடந்தது.

இதனிடையே, சில மணிநேரம் கழித்து ஷாகீத்குன்ச் பகுதியில் உள்ள ஒரு பி.எஸ்.என்.எல். நிறுவனடவர் மீது கையெறிகுண்டுகள் வீசிதீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் புலம் பெயர்ந்து வந்திருந்த தொழிலாளி ஒருவர்காயம் அடைந்தார். காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.