Show all

சமூக வலைத்தளங்களால் தற்கொலைக்கு தூண்டும் ஆபத்து.

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர், போன்றவற்றில் தினமும் 2 மணிநேரத்திற்கு மேல்நேரத்தை செலவிடுபவர்களுக்கு மனோநோய் ஏற்படுவதோடு அவர்களை தற்கொலைக்கு தூண்டும் ஆபத்து இருப்பதாகவும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கனடாவில் உள்ள ஒட்டாவா பொது சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த ஹியூக்சம் பாசாகன்யிங்கா மற்றும் ரொசாமண்ட்லூயிஸ் என்ற ஆராய்ச்சியாலர்கள் இது தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அவர்களது ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதாவது:-

7 வயது முதல் 12 வயது வரை உள்ள சுமார் 25 சதவீத குழந்தைகள் ஒருநாளைக்கு 2 மணி நேரத்துக்கும் அதிகமாக சமூக வலைதளங்களில் தங்களின் நேரத்தைச் செலவிடுகிறார்கள். இந்த சமூக வலைத்தளங்கள் மூலம் பெற்றோர்களுக்கு முக்கியமான செய்திகளை அனுப்புதல், குழதைகளின் மனநல மேம்பாட்டுக்கு உதவும் கருத்துக்கள் பரவவேண்டும்.

குழந்தைகளில் பலர் இந்த சமூக வலைதளங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவதால், அதே வலை தளங்களில் அவர்களின் ஆரோக்கியத்தை மையப்படுத்திய திட்டங்களைக் கொண்டு சேர்க்க முயற்சிக்க வேண்டும். எனினும், சிலருக்கு இதே சமூகவலைதளங்கள் பிரச்சினையாக இருக்கும்போது, வேறு சிலருக்கு தீர்வாகவும் இருக்கின்றன.

இந்த ஆய்வுக்கட்டுரை ‘சைபர்சைக்காலஜி, பிஹேவியர் அண்ட் சோஷியல் நெட்வொர்க்கிங்' எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.