Show all

தமிழக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் விடுதலை

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக 1991 முதல் 1996 வரை பதவி வகித்தவர் கண்ணப்பன் என்ற ராஜகண்ணப்பன்.இவர், அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ஏராளமான சொத்துக்களை சேர்த்ததாக 1996-ம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கண்ணப்பனின் மனைவி நளாயினி, தாயார் ராஜலட்சுமி உட்பட 20 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட நளாயினி, ராஜலட்சுமி ஆகியோர் இறந்து விட்ட நிலையில் இவர்கள் 2 பேர் தவிர மீதமுள்ள 18 பேர் மீதான இந்த வழக்கின் விசாரணை சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் போலீசார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படததால் கண்ணப்பன் உட்பட அனைவரையும் விடுதலை செய்வதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவு பிறப்பித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.