Show all

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு வழக்கு 2 வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

பேரவையின் கண்ணியத்துக்கு ஒவ்வாத செயலில் ஈடுபட்டதாகக் கூறி தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார், பார்த்தசாரதி, முருகேசன், கு.நல்லதம்பி, எஸ்.செந்தில்குமார், ஆர்.அருள்செல்வன் ஆகிய 6 பேரை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்வதாக கடந்த மார்ச் 25-ம் தேதி பேரவைத் தலைவர் அறிவித்தார். பின்னர், அவர்களது சஸ்பெண்ட் காலம் 6 மாதமாகக் குறைக்கப்பட்டது.

சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவில், சஸ்பெண்ட் நடவடிக்கையால் தங்களது அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகிறது. எனவே சபாநாயகர் உத்தரவு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இது குறித்து 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு சட்டப்பேரவை சபாநாயகர், சட்டப்பேரவை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.