Show all

ஆம்பூர் பவித்ரா வழக்கு முடிவு பெற்றது

ஆம்பூர் கலவரத்தில் தொடர்புடைய இளம்பெண் பவித்ரா தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நேற்று(23-07-2015) விசாரணைக்கு வந்தபோது, பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பவித்ரா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரிடம் நீதிபதிகள், யாருடன் செல்ல விருப்பம் என்று கேட்டனர்.

அதற்கு, தனது பெற்றோருடன் செல்ல விரும்புவதாக பவித்ரா தெரிவித்தார். பின்னர், பெற்றோரை அழைத்த நீதிபதிகள், பழைய சம்பவங்களை நினைவுபடுத்தி, துன்பபடுத்த வேண்டாம் என்று அறிவுரை வழங்கினர். பவித்ரா தனது விருப்பப்படி பெற்றோருடன் செல்ல அனுமதித்து, வழக்கு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, சில பத்திரிகைகள் பவித்ராவிடம் ஒருமையில் தாங்கள் பேசியதை விமர்சித்து கட்டுரை எழுதியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்றும், இது குறித்து விளக்கம் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.