Show all

நெய்வேலி என்எல்சி தொழிலாளர்களுடன் நாளை பேச்சுவார்த்தை

என்எல்சி நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்கள் நேற்றிவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சென்னையில் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்த தொழிலாளர்கள் கடந்த 40 மாத காலமாக சிறப்பு ஊதிய மாற்று ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரி போராடி வருகின்றனர். தொழிலாளர்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்காததால், தொ.மு.ச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடந்த மாதம் 18ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக துண்டு பிரசுரங்கள் வழங்கின.

இந்த வேலை நிறுத்தத்திற்கு நீதிமன்றம் தடை பிறப்பித்துள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் நீதிமன்ற சட்டத்துக்கு உட்பட்டு பலகட்டப் போராட்டங்கள் நடத்திவந்தனர். எனினும் என்எல்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், நிரந்தர தொழிலாளர்கள் நேற்றிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.இதனையடுத்து சென்னை சாஸ்திரிபவனில் உள்ள என்எல்சி அலுவலகத்தில் நாளை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.