Show all

பள்ளிகளை மூடுவதாக வெளியான தகவல் உண்மையல்ல கே.சி வீரமணி

தமிழ்நாட்டில் 1200 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியிடம் கேட்டபோது, அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 182 ஆரம்பப்பள்ளிகள், 139 நடுநிலைப்பள்ளிகள், 402 உயர்நிலைப்பள்ளிகள், 810 மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், அதிமுக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் தருவதாகவும், இந்த ஆண்டு பட்ஜெட்டில் 21 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளாகவும் கூறினார்.

மேலும், மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்க, அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் இது போன்ற காரணங்களால் மக்களை திசை திருப்ப மற்ற கட்சிகள் முயல்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.