Show all

மேகி நூடுல்ஸ் மீதான தடையில் சதி நடந்திருபதாக நெஸ்லே நறுவனம் புகார்

நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு காரியம் கலக்கப்பட்டிருந்ததால், மராட்டியம் உள்பட நாடு முழுவதும் அதன் விற்பனைக்கு மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தடை விதித்தது. இதை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று ஐகோர்ட்டில் நீதிபதி வி.எம்.கன்னடே முன்னிலையில் நடந்தது.

அப்போது நெஸ்லே தரப்பில் ஆஜரான வழக்கறினர், ‘‘குறிப்பிட்ட சில பாக்கெட்டுகளில் அதிகப்படியான காரியம் இருந்தது என்பதற்காக ஒட்டுமொத்த மேகி நூடுல்சுக்கும் தடை விதிப்பது நியாயமற்றது. சட்டவிரோதமானது’’ என்று வாதிட்டார். மேலும், இதன் மூலம் அந்நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.