Show all

தெலுங்கில் கதாநாயகனாகிறார் சூர்யா

சூர்யாவின் பல திரைப்படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு டோலிவுட்டில் சூர்யாவிற்கு நல்ல வரவேற்பு உண்டு. நேரடியாகவே தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொள்ள நேரம் வந்துவிட்டது. , பிரபல தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அல்ஜுன் நடித்த படம் சன் ஆஃப் சத்தியமூர்த்தி சமீபத்தில் வெளிவந்தது. அடுத்த படம் சூர்யாவுடன் என முடிவானதும் கதை விவாதத்தில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாரிக்கப்படும் இந்தப் படம் அடுத்த வருட இறுதிக்குள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.