Show all

நில கையக மசோதாவை எதிர்த்து அன்னா ஹசாரே உண்ணாவிரதம் அறிவிப்பு

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் போதுமான பலம் இல்லாததால், மேல் சபையில் நிறைவேற்றப்படாமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலத்தை அரசுகள் அபகரிக்க நில கையகச் சட்டம் வழி வகுத்து விடும் என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். அதேபோல, ராணுவத்தில் எந்த வருடம் ரிட்டையர்ட் ஆனவராக இருந்தாலும், அவர்கள் பதவிகளை வைத்துதான் பென்சன் தர வேண்டும். வருட கணக்கை வைத்து பென்சன் தொகை மாறக்கூடாது என்பதும் அவரின் கோரிக்கை.

இதற்கிடையே அக்டபோர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினம் முதல், இவ்விரு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஹசாரே, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை மேற்க்கொள்ள உள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.