Show all

சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன் பல ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரிகிறது.

இந்த அணிகள் இல்லாமல், 2016 பிரீமியர் தொடர் நடக்குமா என, சந்தேகமாக உள்ளது. அப்படியே நடந்தாலும், தொடருக்கு போதிய வரவேற்பு இருக்காது.

அந்த இரு அணி வீரர்களும் ஏலத்தில் பங்கேற்று வேறு அணிக்கு செல்வரா அல்லது போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பரா என, கேள்வி எழுந்துள்ளது.சூதாட்டத்தில் வீரர்களுக்கு தொடர்பில்லை என்பதால், இந்த தீர்ப்பு அவர்களை கட்டுப்படுத்தாது. ஒருவேளை இந்த அணிகளை வேறு யாராவது தற்காலிகமாக வாங்கும் பட்சத்தில், வேறு பெயர்களில் வரும் தொடரில் பங்கேற்கலாம். இதுகுறித்து, பி.சி.சி.ஐ., தான் முடிவு செய்ய வேண்டும்.

மேலும் இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனம் இந்த தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்ய போவதாக அறிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.