Show all

பேஸ்புக்கில் விஜயகாந்த் பக்கத்தை தொடங்கியுள்ளார்

அரசியல் தலைவர்களான கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை தொடர்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், பேஸ்புக்கில் இணைந்துள்ளார்.கடந்த ஜூலை முதல் தேதியிலிருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது பேஸ்புக் பக்கத்தைத் தொடங்கி உள்ளார்.

அதில் இது என் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கம், இதன் மூலம் தேமுதிக கட்சியின் அறிவிப்புகள், நிகழ்வுகள் மற்றும் முக்கிய கருத்துகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள உள்ளேன் என தெரிவித்துள்ளார். இந்த பக்கத்தில், ஆங்கிலம் மற்றும் தமிழில் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.