Show all

முந்தய தி.மு.க ஆட்சியில் வேவு பார்க்கும் மென்பொருள் வாங்கியதாக விக்கிலீக்ஸ் தகவல்

விக்கிலீக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் இத்தாலியை சேர்ந்த ஹேக்கிங் நிறுவனத்துடன் தமிழக உளவுப்பிரிவு ஐஜி தொடர்பு கொண்ட மின்னஞ்சல் விபரங்களை வெளியிட்டுள்ளது.
அதில், குறிப்பிட்ட இத்தாலி நிறுவனத்தின் விற்பனை மேலாளர், வேவு பார்க்கும் மென்பொருள் குறித்து விளக்கம் அளிக்க 2011ம் ஆண்டு மார்ச் 9ம்தேதி சென்னை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநில உளவு பிரிவு அரங்கத்தில் மென்பொருள் குறித்து விளக்கம் அளிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் இந்த உளவு பார்க்கும் மென்பொருள் வாங்க அப்போதைய திமுக அரசு முயன்றதாக தகவல் வெளியாகியிருப்பது சர்சையை கிளப்பியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.