Show all

மீண்டும் வெடிக்கும் மொழிப்போர்! அதிமுக அரசுக்கு வைகோ எச்சரிக்கை

47ஆண்டு காலமாக நடைமுறையில் இருக்கும் இருமொழித் திட்டத்திற்கு குழிதோண்டிவிட்டு மும்மொழித் திட்டத்திற்கு அரங்கு அமைக்க முயற்சித்தால் 1965களில் காங்கிரசு அரசுசந்தித்தது போன்ற மொழிப் போரை இந்த அரசு சந்திக்க நேரிடும் என்று வைகோ எச்சரித்தார்.1937 இராஜாஜி இந்தி திணிப்பிற்கு முயன்ற போது தமிழகம் ஒருமொழிப் போரைச் சந்தித்தது. 1965களில் காங்கிரசு மும்மொழித் திட்டத்தைக் கொண்டு வந்த போது இந்தி எதிர்ப்புப்போராட்டம் மிகப்பெரிய மாணவர் போராட்டமாக வெடித்து தமிழகவரலாற்றில் பதிவானது.அதன் பொருட்டாக 1967ல் பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தில் இருமொழித்திட்டத்திற்கான சட்டம் கொண்டுவந்தார்.

47 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிமுக அரசு மீண்டும் ஒரு மொழிப்போருக்கு வித்திட முயல்கிறது. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மதுரை சூலை20 கோவை22 சென்னை 24 ஆகியநாட்களில் கலந்தாலோசனை நடைபெற உள்ளன.இந்தக்கலந்தாலோசனைக்கு 13 கருப்பொருள்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன.அதில் 11வது கருப்பொருள் மொழி வளர்ச்சி என்ற தலைப்பில்தமிழகக்கல்வி நிலையங்களில் மூன்றாவது மொழியாகசம் சுகிருத்ததை கட்டாயப்பாடமாக ஆக்கலாமா? என்பது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.