Show all

தென் ஆப்பிரிக்க பவுலர் ரபாதா அபாரம்

வங்கதேசத்துக்கு எதிராக நேற்று மிர்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ரபாதா ஹாட்ரிக்குடன் 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் வங்கதேசம் 36.3 ஓவர்களில் 160 ரன்களுக்குச் சுருண்டது.

தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து 32-வது ஓவரில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

தமிம் இக்பால், லிட்டன் தாஸ், மஹமுதுல்லா ஆகியோரை வரிசையாக வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிந்ததுடன் அறிமுக போட்டியிலேயே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தார்.

ஒருநாள் போட்டியில் அறிமுக வீரர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதில் முதலில் சாதனை நிகழ்த்தியவர் மே.இ.தீவுகளின் பிடல் எட்வர்ட்ஸ், இவர் ஜிம்பாப்வேயிற்கு எதிராக 2003-இல் 22 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அறிமுக பவுலர் சாதனையை தன் வசம் வைத்திருந்தார். அதனை தற்போது ரபாதா முறியடித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.